Home இலங்கை நுவரெலியா நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவு

நுவரெலியா நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவு

0
image

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, அப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான காலநிலை நிலவி வருவதுடன், இடையிடையே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், நீர் மின் உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பில் இன்று (09) காலை 8 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின்படி, அவை முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு கணிசமான அளவு நீர் தேவைப்படுவதாக லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 6 அடி நீர் தேவைப்படுகிறது.

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கும் மேலும் 6 அடி நீர் தேவைப்படும் நிலையில், கென்யோன் நீர்த்தேக்கத்திற்கு 8 அடியும், லக்சபான நீர்த்தேக்கத்திற்கு 10 அடியும் நீர் தேவைப்படுகிறது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 2 மீற்றர் தேவைப்படுவதுடன், கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேலும் 15 மீற்றர் நீர் தேவைப்படும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நிலவும் வெப்பமான காலநிலையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறையும் பட்சத்தில், நீர் மின் உற்பத்தியிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/the-water-level-of-the-nuwara-eliya-reservoirs-is-very-low-1788948792

NO COMMENTS

Exit mobile version