Home இலங்கை அரசியல் யாழில் சஜித்திற்கு காத்திருந்த பலத்த ஏமாற்றம்

யாழில் சஜித்திற்கு காத்திருந்த பலத்த ஏமாற்றம்

0

யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று (10) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச்
செய்யப்பட்டுள்ளதால் பலத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி
முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர்.

இரண்டாவது முறையாக இரத்து

நண்பகல் வரை மக்களை ஒன்று திரட்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்விகண்ட நிலையில்
இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு
வழங்கியிருந்த நிலையிலேயே இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின்
பொதுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version