Home இலங்கை நெடுந்தீவை முற்றுகையிட்ட தமிழக விசைப்படகுகள்; மீன்பிடியை கைவிட்டு கரை திரும்பும் மீனவர்கள்

நெடுந்தீவை முற்றுகையிட்ட தமிழக விசைப்படகுகள்; மீன்பிடியை கைவிட்டு கரை திரும்பும் மீனவர்கள்

0
image

யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அதிகளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று சனிக்கிழமை (05) தமிழக மீனவர்களின் ரோலர் விசைப்படகுகள், நெடுந்தீவு கரையிலிருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவுக்குள் உள்ள கடற்பரப்பில் அதிகளவில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான இந்திய விசைப்படகுகள் வரிசையாக நிற்பதால், அந்தப் பகுதிக்கு அப்பால் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இதன் காரணமாக நெடுந்தீவு மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டு கரை திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் நெடுந்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/tamil-nadu-patrol-boats-blockaded-the-long-island-fishermen-return-to-shore-after-abandoning-fishing-1788601646

NO COMMENTS

Exit mobile version