Home உலகம் ட்ரம்ப் விதித்த காலக்கெடு…! நிலை தடுமாற போகும் ஹமாஸ்

ட்ரம்ப் விதித்த காலக்கெடு…! நிலை தடுமாற போகும் ஹமாஸ்

0

தான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என ஹமாஸ் அமைப்புக்கு, அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது , “நான் ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணிநேரத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்.

பணயக்கைதிகளின் விடுதலை

பணயக்கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்திருப்பது ஹமாஸுக்கும் நல்லதல்ல. இனி நான் சொல்ல வேண்டியதில்லை.

அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே, பணயக்கைதிகளை விடுதலை செய்திருக்க வேண்டும்.

அத்துடன், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடந்தியிருக்கக் கூடாது. இதனால் பலர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவிலிருந்து சிலரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் பதவியேற்று இரண்டு வாரங்களுக்குள் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும். ”என்று அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version