Home இலங்கை சமூகம் இயக்கச்சியிலுள்ள றீச்சா சுற்றுலா தளத்திற்கு விஜயம் செய்த கனேடிய தமிழ் அமைச்சர்

இயக்கச்சியிலுள்ள றீச்சா சுற்றுலா தளத்திற்கு விஜயம் செய்த கனேடிய தமிழ் அமைச்சர்

0

கனேடிய அமைச்சர் கரி ஆனந்த சங்கரி(Gary Anandasangaree) கிளிநொச்சி றீச்சாவிற்கு வருகை தந்துள்ளார்.

கிளிநொச்சி(Kilinochchi), இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது.

அந்த வகையில் கனேடிய அமைச்சர் கரி ஆனந்த சங்கரி அங்கு வருகை தந்துள்ளார்.

கரி ஆனந்த சங்கரி 

இவர், இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ.ஆனந்தசங்கரியின் இரண்டாவது மகனாவார்.

இலங்கையில் பிறந்த இவர் தனது 10வது வயதில் 1983இல் தனது தாயாருடன் கனடாவிற்குப் புலம்பெயர்ந்துள்ளார்.

பின்னர் ரொறன்ரோவில் உள்ள ஓஸ்குட் ஹால் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்று 2006இல் பட்டம் பெற்றார்.

அந்தவகையில் முடிக்குரிய பூர்வீகக் குடிகள் உறவுகளுக்கான அமைச்சராக இருந்த கரி ஆனந்தசங்கரிக்கு வடக்கு விவகாரங்கள் அமைச்சுப் பொறுப்பும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சுப் பொறுப்பும் மேலதிகமாக அண்மையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version