Home முக்கியச் செய்திகள் பட்டுவத்த சாமர கைது

பட்டுவத்த சாமர கைது

0

 டி.கே.பி கபில

அஜர்பைஜானில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் கும்பலின் தலைவரான மனோஜ் சுரங்க லியனகே (48 வயது), அல்லது ‘பட்டுவத்த சாமர’, நேற்று (மே 10) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

ராகம, பட்டுவத்தை பகுதியைச் சேர்ந்த இவர், நீண்ட காலமாக துபாயில் தலைமறைவாக இருந்தார். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு துபாயில் இருந்து அஜர்பைஜானுக்குத் தப்பிச் சென்றபோது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அஜர்பைஜானில் இருந்து இந்தியாவின் புது டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அவர், அங்கிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-196 மூலம் நேற்று இரவு 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குஸ அழைத்துவரப்பட்டார்.

பட்டுவத்த சாமர இலங்கையில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபராவார்.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:

துசித்த ஹல்லோலுவ என்பவர் மீதான தாக்குதல் சம்பவம்.

மற்றுமொரு பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலை முயற்சிக்கு ஆயுதங்களை வழங்கியமை.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாரிய போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடையமை.

பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் திட்டமிட்டமை. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD) பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/150-376911

NO COMMENTS

Exit mobile version