Home முக்கியச் செய்திகள் பதறினார் கோட்டா: கைது செய்ய வேண்டாமென நீதிமன்றில் மனுத்தாக்கல்

பதறினார் கோட்டா: கைது செய்ய வேண்டாமென நீதிமன்றில் மனுத்தாக்கல்

0

 உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுத்து கட்டளையை பிறப்பிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் பொறுப்பிலக்கியத் தலைவர் மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

முந்திய செய்தி… https://shorturl.at/Hvr3e

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் வெளிநாட்டுப் பயணத்தடையை 2026 ஜூன் 03  அன்று விதித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களிலிருந்து எழும் விடயங்கள் குறித்து தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலித்த நீதவான், 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் இராணுவ கர்னல் முஹம்மது அன்சார்

முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம

ஆகியோருக்கு பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/150-378645

NO COMMENTS

Exit mobile version