Home முக்கியச் செய்திகள் பாடசாலைக்கு திங்கட்கிழமை (20) விடுமுறை

பாடசாலைக்கு திங்கட்கிழமை (20) விடுமுறை

0

  

 

கால்பந்து இறுதிப்போட்டியைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கும் கால்பந்து ஆர்வலர்களான மாணவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை (20) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் என். சம்சுதீன் தனது சமூக ஊடகக் கணக்குகள் வாயிலாக அறிவித்துள்ளார்.

 திங்கட்கிழமை (20) அதிகாலை (இந்திய சீர்நேரம்) கால்பந்து இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதால், மாணவர்கள் குறித்த நேரத்தில் பாடசாலைக்குச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்று கருதி, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஆளும் கூட்டணியின் தலைவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தலைவரும், முன்னாள் கேரள கல்வி அமைச்சருமான வி. சிவன்குட்டி ஆகியோர் அரசிடம் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இழந்த பாடசாலை வேலைநாளை ஈடுசெய்யும் வகையில், வழக்கமாக விடுமுறை நாளாக இருக்கும் ஒரு சனிக்கிழமையை வேலைநாளாக மாற்றலாம் என்றும் சிவன்குட்டி ஆலோசனையையும் முன்மொழிந்திருந்தார்.

 

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-20-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/150-380133

NO COMMENTS

Exit mobile version