Home இலங்கை பிரச்சினைகளுக்கு தீர்வின்றி பல்கலைக்கழகங்கள் முடங்கும் நிலை: நாளை முதற்கட்ட போராட்டம்

பிரச்சினைகளுக்கு தீர்வின்றி பல்கலைக்கழகங்கள் முடங்கும் நிலை: நாளை முதற்கட்ட போராட்டம்

0
image

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

இதனால் பல்கலைக்கழக அமைப்பு முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சம்மேளனம், இதற்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால், முதற்கட்ட தொழிற்சங்க நடவடிக்கையாக நாளை நண்பகல் உணவு வேளையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முன்னால் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

இதன்பின்னரும் உரிய தீர்வுகள் எட்டப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும், இது அனைத்து மாணவர் சமூகத்தையும் பாதிக்கும் ஒரு விடயமாக அமையும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/universities-are-on-the-verge-of-shutting-down-due-to-unresolved-issues-first-round-of-protests-tomorrow-1788248149

NO COMMENTS

Exit mobile version