Home இலங்கை மண்டலாய்ப் பிள்ளையார் ஆலய மணவாளக்கோல உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மண்டலாய்ப் பிள்ளையார் ஆலய மணவாளக்கோல உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

0
image

யாழ். வடமராட்சி கிழக்கு, முள்ளியான் மண்டலாய்ப் பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை மண்டலாய்ப்பிள்ளையாருக்கு விசேட  பூஜையும் அன்னதானமும் இடம்பெற்றன.

தொடர்ந்து மறுநாளான நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மூலஸ்தானப் பூஜையுடன் ஏனைய பரிபாலனமூர்த்திகளுக்கும் விசேட பூஜை இடம்பெற்று பெருமான் முத்துச் சப்பரத்தில் எழுந்தருளி அதிகாலை 4 மணியளவில் திருவீதி உலா வருகை தந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மறுநாள் திங்கட்கிழமை  அதிகாலை வரை கலை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ யோகசம்பந்தக்குருக்கள், உதவிக் குருக்கள் சகிதம் மணவாளக்கோல உற்சவத்தை நடத்தி வைத்தார்.

Source: https://samugammedia.com/the-aalaya-manavala-kolam-temple-wedding-attire-festival-of-mandala-pillaiyar-was-celebrated-with-great-grandeur-1788255279

NO COMMENTS

Exit mobile version