Home இலங்கை அரசியல் வரலாற்று கடமையை நிறைவேற்ற தமிழ் மக்களுக்கு வாய்ப்பு: தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்துரைப்பு

வரலாற்று கடமையை நிறைவேற்ற தமிழ் மக்களுக்கு வாய்ப்பு: தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்துரைப்பு

0

தமிழ் மக்கள் அனைவரும் சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என  தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பரமசிவம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“எம் அன்புக்கினிய தமிழ் மக்களே! ஈழத் தமிழர்கள்
கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள்.

தேர்தல் வாக்குறுதி

நாம் நம்பிய
அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே வருகிறார்கள்.

தேர்தலில்
வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை.

இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது.

வெற்றி பெறப்போவதில்லை எனத்
தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம். ஏன் தெரியுமா?

நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது உரிமைகளுக்கான
போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதையும், அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை
இன்னும் இழந்து விடவில்லை என்பதையும் அத்துடன் எமது வலிகளையும் வேதனைகளையும்
இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம்.

வெற்றி பெறும்வரை எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த
அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது எமது வரலாற்றுக் கடமை” என்றுள்ளது.

Source: https://tamilwin.com/article/tlap-support-president-election-1725509676

NO COMMENTS

Exit mobile version