Home இலங்கை அரசியல் இந்தியாவின் உதவியுடன் வடக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் : சஜித் அறிவிப்பு

இந்தியாவின் உதவியுடன் வடக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் : சஜித் அறிவிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தேசிய அபிவிருத்திக்கு வடக்கு மற்றும் கிழக்கின் பங்களிப்பு அதிகரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேற்கு மாகாணம் 43 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

அதே சமயம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, வடக்கு 4.1 சதவீதத்தையும் கிழக்கு மாகாணம் 5.2 சதவீதத்தையும் பங்களிக்கின்றன.
தமது அரசாங்கத்தின் கீழ் எதிர்கால அரசாங்கம் இந்த நிலையை மாற்றும்.

தேசிய அபிவிருத்தி

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், தமது அரசாங்கத்தின் கீழ் தேசிய அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் என்று மன்னாரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்கான நிதியை உருவாக்குவதற்காக விசேட நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு பிரேமதாச தனது வேண்டுகோளை மீண்டும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் குறிப்பாக மன்னாரில், இந்தியாவின உதவியுடன் போக்குவரத்துப்பணிகள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version