Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம்

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம்

0

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) சேர்ந்து போட்டியிடுவோம் என்ற தீர்மானத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கின்றோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SlMC) கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று (01.10.2024) இரவு இடம்பெற்ற கட்சி கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “புத்தளம் மாவட்டம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த ஒரு
கலந்துரையாடலை நாங்கள் நடாத்தி இருக்கிறோம். இதிலே இன்று மூன்று விவகாரஙகள்
கவனத்தில் கொள்ளப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடல் 

இன்று பரவலாக புத்தளத்தில் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாததன் காரணமாக கடந்த முறை எல்லா அமைப்புகளும்
கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிட்ட காரணத்தினால் ஒரு உறுப்பினரை
பெறுகின்ற வாய்ப்பு இருந்தது.

இதனை அடிப்படையாக வைத்து அதேமுறையில் மீண்டும் ஒரு
முயற்சி செய்யப்படவேண்டும் என்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் நடந்து
கொண்டிருக்கின்றது.

குறித்த அமைப்பினரோடு சந்திப்பதற்கு நாங்கள்
வரவேண்டும் என்பதற்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து
சாதகமாக பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கிறோம். எனவே இந்த சந்திப்பை
நடாத்துவதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

அதேநேரம், எங்களுடைய கட்சியினர் தனித்து போட்டியிடுவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் சேர்ந்து போட்டியிடுவதற்குமான பொதுவான தீர்மானத்திற்கும் பாதகமில்லாமல் நாங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version