Home இலங்கை பிஸ்கட் வாங்க சென்ற சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி… 65 வயது வர்த்தகர் கைது

பிஸ்கட் வாங்க சென்ற சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி… 65 வயது வர்த்தகர் கைது

0
image

மாதம்பே பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் அவரது கடையில் இருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்குச் சென்ற சிறுமியை, கடைக்குள் அழைத்துச் சென்று அவர் பாலியல் தொல்லை செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/shocking-incident-that-happened-to-a-girl-who-went-to-buy-biscuits-65-year-old-businessman-arrested-1781329946

NO COMMENTS

Exit mobile version