Home இலங்கை புதிய சீனத் தூதர் வெய் ஹுவாஜியாங் ரில்வின் சில்வாவைச் சந்தித்துப் பேச்சு! முதலீடுகளை அதிகரிக்க உறுதி

புதிய சீனத் தூதர் வெய் ஹுவாஜியாங் ரில்வின் சில்வாவைச் சந்தித்துப் பேச்சு! முதலீடுகளை அதிகரிக்க உறுதி

0
image

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஜியாங், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நீண்டகால இலங்கை – சீனா உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், சீன முதலீடுகளை மேலும் ஈர்ப்பது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கச் சீன முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று தூதுவர் உறுதியளித்தார்.

சீனாவின் வறுமை ஒழிப்பு அனுபவங்கள் இலங்கைக்குப் பயனுள்ளதாக அமையும் என்று குறிப்பிட்ட தூதுவர், அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற வறுமையைப் போக்குவதை நோக்கமாகக் கொண்ட “பிரஜா சக்தி” திட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தினார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டும், வரலாற்றுச் சிறப்புமிக்க இறப்பர் – அரிசி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 75 ஆண்டும் 2027 ஆம் ஆண்டில் நிறைவடைவது குறித்தும் இரு தரப்பினரும் இதன்போது நினைவுக கூர்ந்துள்ளன.

Source: https://samugammedia.com/new-chinese-ambassador-wei-huaxiang-meets-rilvin-silva-for-talks-pledge-to-boost-investments-1788342787

NO COMMENTS

Exit mobile version