Home இலங்கை புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயம்: பொதுமக்கள் கருத்து பெறும் நடவடிக்கை நிறைவு

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயம்: பொதுமக்கள் கருத்து பெறும் நடவடிக்கை நிறைவு

0
image

புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான கட்டணங்களைத் தீர்மானிக்கும் நடவடிக்கைக்காக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் செயல்முறை இன்று (22) நிறைவடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த 6 மாதங்களுக்கான புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கொள்முதல் கட்டணங்கள் தீர்மானிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், சூரிய, காற்று மற்றும் பயோமாஸ் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபையின் தொடர்ச்சி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான விலை மற்றும் விலை சூத்திரத்தை தீர்மானித்து அங்கீகரிக்கும் அதிகாரம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான பொருத்தமான விலை சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜயநாத் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை சூத்திரங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களை நிர்ணயிப்பது தொடர்பான பொதுமக்கள் ஆலோசனைச் செயல்முறை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன்போது பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான தகவல்கள் மற்றும் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/revisable-electricity-tariff-public-consultation-process-completed-1784701087

NO COMMENTS

Exit mobile version