Home இலங்கை புத்தளம்–பொத்துவில் கடற்பரப்பில் பலத்த காற்று; சிவப்பு எச்சரிக்கை

புத்தளம்–பொத்துவில் கடற்பரப்பில் பலத்த காற்று; சிவப்பு எச்சரிக்கை

0
image

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் எனச் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. 

இதன்காரணமாக, இக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்வரும் அறிவித்தல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/strong-winds-in-the-puttalampottuvil-sea-area-red-warning-1785823062

NO COMMENTS

Exit mobile version