Home முக்கியச் செய்திகள் பெண் பிசியோதெரபிஸ்ட் படுகொலை: சந்தேகநபர் மனைவியுடன் யாழில் கைது

பெண் பிசியோதெரபிஸ்ட் படுகொலை: சந்தேகநபர் மனைவியுடன் யாழில் கைது

0

நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில், பெண் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) ஒருவரைப் படுகொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் மற்றும் அவரது சட்டப்பூர்வ மனைவி ஆகியோரை, யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். இது குறித்து நுவரெலியா பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களும் அவரது மனைவியும் மாறுவேடத்தில், வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் சொகுசுப் பேருந்து ஒன்றில் தப்பிச் செல்வதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குறித்த பேருந்தின் ‘ஜி.பி.எஸ்.’ (GPS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் துப்பு துலக்கிய பொலிஸார், பேருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தவுடன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், அது குறித்து உடனடியாக யாழ்ப்பாணக் குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்த அந்த அதிகாரி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், நீதிமன்ற அனுமதியுடன் சந்தேகநபர்களைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/150-379018

NO COMMENTS

Exit mobile version