Home இலங்கை பொருள் வாங்க வந்ததாக நடித்து பெண்ணின் சங்கிலி பறிப்பு – நிலாவெளியில் பரபரப்பு

பொருள் வாங்க வந்ததாக நடித்து பெண்ணின் சங்கிலி பறிப்பு – நிலாவெளியில் பரபரப்பு

0
image

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டைப் பகுதியில் கடையில் இருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு சென்ற பரபரப்பு சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

நேற்று (06) மதியம் இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் குறித்த கடையை தாண்டிச் சென்று, பின்னர் மீண்டும் அக்கடைக்கு முன் நிறுத்தி, ஒருவர் கடையில் பொருள் வாங்குவதாக பாசாங்கு செய்து,

குறித்த கடையில் இருந்த 69 வயதான வயோதிபப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நகர் பகுதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளார். 

இச்சம்பவம் அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது. 

மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-womans-necklace-was-snatched-while-she-was-walking-with-goods—chaos-in-the-moonlight-1780816471

NO COMMENTS

Exit mobile version