அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் 3 விடயங்கள் தொடர்பில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அரசியலமைப்பு வாக்கெடுப்பு ஒன்று அறிவிக்கப்படும் வரை, அதிபர் வேட்புமனு தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் இன்றி பொதுவான சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கங்களை முதன்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பாவங்களை கழுவ புத்தகம் எழுதிய கோட்டாபய : விமர்சிக்கும் எம்.பி
பொதுவான தீர்மானம்
அத்துடன், அரசாங்கத்தின் பொது விவகாரங்களில் உத்தியோகபூர்வமாக பங்கேற்பதற்கான சந்தர்ப்பத்தை முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை, அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எடுத்த தீர்மானம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அத்தோடு, கட்சி என்ற ரீதியில் தவறான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்க முடியாது என்பது பொதுஜன பெரமுனவின் பொதுவான தீர்மானம் எனவும், எனவே அந்த தவறான முன்னுதாரணம் தொடர்பாக எடுக்க வேண்டிய உத்தியோகபூர்வ நடவடிக்கையில் கட்சி ஏற்கனவே இறங்கியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச அதிபருக்கு அறிவித்துள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய சாட்சியம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |