Home இலங்கை போதைப்பொருள் கடத்தல்; சுதந்திரக் கட்சி தலைவர் மற்றும் மனைவி கைது

போதைப்பொருள் கடத்தல்; சுதந்திரக் கட்சி தலைவர் மற்றும் மனைவி கைது

0
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை – மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் தலைவரும் அவரது மனைவியும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிங்குரகொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 12 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இரு சந்தேகநபர்களும் ஹிங்குரகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஹிங்குரகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/drug-trafficking-freedom-party-leader-and-wife-arrested-1786268833

NO COMMENTS

Exit mobile version