Home இலங்கை போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்! அவிசாவளையில் அதிரடி முற்றுகை

போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்! அவிசாவளையில் அதிரடி முற்றுகை

0
image

அவிசாவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, போலியான SLS தரநிலைச் சின்னம் பொறிக்கப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த குடிநீர் போத்தல்கள் ருவன்வெல்ல – அமித்திரிகல பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையொன்றில் தயாரிக்கப்பட்டு, அவிசாவளை பகுதியில் உள்ள கிடங்கொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களில் SLS தரநிலைச் சின்னத்துடன், சான்றிதழ் இலக்கம் 894 என்பதும் முறையற்ற வகையில் குறிப்பிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

எனினும், குறித்த குடிநீர் போத்தல்கள் அப்போது சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்றும், சந்தையில் விற்பனை செய்வதற்காகத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த கையிருப்பாக அவை இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/8500-drinking-water-bottles-with-fake-sls-labels-seized-major-raid-in-avissawella-1787484981

NO COMMENTS

Exit mobile version