Home இலங்கை மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்களை மடக்கிய பொலிஸார்!

மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்களை மடக்கிய பொலிஸார்!

0
image

மணல் அனுமதிப்பத்திரத்தை தவறாக வேறு பகுதியில் பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் உளவு இயந்திரமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த கைது முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த பகுதியில் நேற்று திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிசார் திருகோணமலை மாவட்ட மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் அகழ்வில்  ஈடுபட்ட நான்கு டிப்பர்களும் ஒரு உளவு இயந்திரமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவத்தின் டிப்பர் சாரதிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடயப்பொருட்கள்  22.07.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம்  குறித்த கல்லாறு பகுதியில் தற்போது வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் மணலானது கட்டுமான பணிகளுக்கு உகந்ததாக காணப்படவில்லை எனவும்  வேறும் உப்பு மணலினையே கல்லாறு பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்தது. 

எனவே இதனை பயன்படுத்துவோர் மிகுந்த அவதாரத்துடனும் நீண்ட நாள் நிலைத்து நிற்பதற்காக அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற மணலானது தரமாதா என ஒரு முறை பார்வையிட்டு கட்டுமான பணிக்கான மணலா என தெரிவு செய்து பெற்றுக் கொள்ளுமாறு தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்தார். 

Source: https://samugammedia.com/police-intercept-tippers-involved-in-sand-mining-1784546905

NO COMMENTS

Exit mobile version