உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில்,
நேற்று (02) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 388,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேபோல் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி இன்றைய தினம் (03) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340. 44 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இதன் விற்பனை விலை ரூ. 341. 09 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/gold-price-to-reach-4-lakh-again—dollar-price-falls-1783072190
