Home இலங்கை மீன்பிடிக்கச் சென்றவர் கல்குவாரிக் குட்டையில் மீன்பிடி வலையில் சடலமாக உயிரிழப்பு

மீன்பிடிக்கச் சென்றவர் கல்குவாரிக் குட்டையில் மீன்பிடி வலையில் சடலமாக உயிரிழப்பு

0
image

நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி இரவு, தனது வீட்டிற்கு அருகிலுள்ள கல் குவாரிக் குட்டை ஒன்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், குறித்த நபரின் சடலம் கல் குவாரிக் குட்டையில் இருந்த மீன்பிடி வலையொன்றில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-person-who-went-fishing-died-in-a-fishing-net-in-kalkuwarik-pond-1784457583

NO COMMENTS

Exit mobile version