Home இலங்கை மூதூரில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு அறநெறி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபவணி

மூதூரில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு அறநெறி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபவணி

0
image

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு அறநெறி பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு நடைபவணி இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மூதூரில் இடம்பெற்றது.

இதனை மூதூர் பிரதேச செயலகத்தின் கலாச்சார பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

மூதூர் சின்னக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்னாலிருந்து சுலோகங்களை ஏந்தியவாறு ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி பள்ளிக்குடியிருப்பு கிராமம் வரை இடம்பெற்றது.

இப் பேரணியில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சின்னக்குளம், இத்திக்குளம், பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், சிறினிவாசபுரம் கிராமங்களைச் சேர்ந்த அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மூதூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://samugammedia.com/in-mooduru-a-awareness-rally-by-ethics-students-was-held-on-the-occasion-of-national-integrity-week-1785670096

NO COMMENTS

Exit mobile version