Home இலங்கை யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

0
image

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் உள்ள “சதி” குற்றச்சாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிராகரித்துள்ளது.

இந்த மனு தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட்டதுடன், நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, நீதியரசர்கள் அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/rejection-of-yoshitha-rajapaksas-review-petition-court-of-appeal-verdict-1783057644

NO COMMENTS

Exit mobile version