Home இலங்கை லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வௌியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வௌியான அறிவிப்பு

0
image

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் இலங்கை ரூபாவின் வீழ்ச்சி ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது  என லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாவாக காணப்படும். 

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 890 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான விற்பனை வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக கிடைத்துள்ள நிதி வலிமையைக் கொண்டு, நுகர்வோருக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள   அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/public-notice-regarding-the-price-of-litro-gas-1780645292

NO COMMENTS

Exit mobile version