Home இலங்கை வடக்கு – கிழக்கில் இன்று அதிகரிக்கும் வெப்பநிலை!

வடக்கு – கிழக்கில் இன்று அதிகரிக்கும் வெப்பநிலை!

0
image

பசுபிக் பிராந்தியத்தில் உருவாகியுள்ள எல்நினோவின் தாக்கம்  தற்போது மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது. 

தற்போது இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள எல்நினோ –  ஜூலை இறுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய எல்நினோவின் தாக்கம் இன்று  வடக்கு மற்றும் கிழக்கில் உணரக்கூடியதாக இருக்கும்.      

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண்  அதிகரிக்கும். 

இதன் காரணமாக பகல் வேளையில்  அதிகரித்த வெப்பநிலை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும். 

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும். எல்நினோ  இலங்கை மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

எல்நினோவால் ஏற்படும் தாக்கத்தால் நீர் ஆவியாக்கம் ஏற்பட்டு நீர்த் தட்டுப்பாடும் ஏற்படும். எனவே எல்நினோவால் ஏற்படும் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

Source: https://samugammedia.com/temperatures-rising-in-the-north-and-east-today-1784082858

NO COMMENTS

Exit mobile version