யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரக் கோவிலை அண்மித்த மருதங்கேணி – பருத்தித்துறை வீதியின் தெற்குப் பகுதியில் விஷமிகளால் தீ வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தால் வயல் வேலிகள், புற்தரைகள் மற்றும் பனை மரங்கள் எரிந்து வருகின்றன.
தீ பரவியதால் அப்பகுதியில் உள்ள வயல் வேலிகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பனை மரங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக வடமராட்சி பகுதியில் அடிக்கடி இவ்வாறான தீவைப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், இதன் காரணமாக பல ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் வயல் வேலிகள் தீக்கிரையாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த தொடர்ச்சியான தீவைப்பு சம்பவங்களைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
