Home இலங்கை வவுனியாவில் பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற தூக்குக் காவடி பவனி: திரளான பக்தர்கள் தரிசனம்!

வவுனியாவில் பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற தூக்குக் காவடி பவனி: திரளான பக்தர்கள் தரிசனம்!

0
image

வவுனியாவில் இன்று”தூக்குக் காவடி” பவணி அங்கிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

வவுனியா நகரின் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த தூக்குக் காவடி பவணி, கற்பகபுரம் ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் நோக்கி பக்திப் பரவசத்துடன் பயணித்தது.

ஆலய வீதிகளினூடாக காவடி பயணித்த போது, வீதிகளின் இருமருங்கிலும் திரண்டிருந்த பொதுமக்கள் “அரோகரா” கோஷமிட்டு, கற்பூர ஆரத்தி எடுத்து பக்திபூர்வமாக வழிபட்டனர்.

நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக, அடியவர் மூவர் ஓரே தூக்கு காவடியில் ஆடிய காவடி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

பாரம்பரிய ஆன்மீக மரபுகளைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், வவுனியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Source: https://samugammedia.com/thookku-kavadi-procession-held-with-devotional-fervor-in-vavuniya-multitudes-of-devotees-witness-the-event-1782746112

NO COMMENTS

Exit mobile version