Home இலங்கை கல்வி 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் பதிவு புத்தகத்தில் மாற்றம்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் பதிவு புத்தகத்தில் மாற்றம்

0

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆட்சி தொடங்கியதையடுத்து பாடசாலையில் நடைமுறையில்
இருந்த பாடப் பதிவு புத்தகத்திலும் பல புதிய விடயங்களுடன் மாற்றம்
ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமும் நீல நிறத்தில் காணப்பட்ட பாடப் பதிவு புத்தகம் குறித்த வலயக்
கல்வி திணைக்களங்களால் அச்சகங்களில் அச்சிடப்பட்டு பாடசாலைகளிடம் பணம்
அறவிட்டு வழங்கப்பட்டு வந்தன.

பாடப்பதிவு புத்தகங்கள்

ஆனால், தற்போதைய புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய நாட்டில் உள்ள
அனைத்து பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்கான பாடப் புதிவு புத்தகங்கள்
அனைத்தும் ஒரு இடத்தில் அச்சிடப்பட்டு குறித்த பாடப் பதிவு புத்தகத்தில்
மேலும் பல புதிய விடயங்களை உள்ளடக்கி சிவப்பு மற்றும் கறுப்பு வர்ணம் கொண்டதாக
வலயக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு
வருகின்றது.

குறித்த ஒவ்வொரு வகுப்புக்களுக்குமான பாடப் பதிவு புத்தகத்தில் மாணவர் மற்றும்
அவர்களது பெற்றோர் தொடர்பான முழுமையான விபரம், மாணவர்கள் பாடசாலை நேரத்தில்
வெளிச் செல்லும் விபரம், ஆசிரியரின் உள்ளக மதிப்பீடு விபரம், ஆசிரியர்களின்
மேலதிக கற்பித்தல் செயற்பாட்டு விபரம், தவணை அலகுகள் நிறைவு செய்த விபரம் என
பல விடயங்களை உள்ளடக்கியதாக குறித்த பாடப்பதிவு புத்தகங்கள் வழங்கப்பட்டு
வருகின்றன. 

NO COMMENTS

Exit mobile version