Home இலங்கை வவுனியாவில் 21 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! இருவர் தப்பியோட்டம்

வவுனியாவில் 21 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! இருவர் தப்பியோட்டம்

0
image

வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.  

 

குறித்த கைது நடவடிக்கை வவுனியா லக்சபானா வீதிக்கு நேற்று இடம்பெற்றது. 

வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த காரில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவினை மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றமுற்றப்பட்ட போது இவ் கைதுசம்பவம் இடம்பெற்றது.

இதன் போது கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை பொலிசார் மீட்டுள்ளதுடன், வாகனத்தையும், முச்சக்கவண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Source: https://samugammedia.com/someone-was-arrested-with-21-kilos-of-cannabis-in-vavuniya-two-others-escaped-1782445596

NO COMMENTS

Exit mobile version