Home இலங்கை வாகனம் செலுத்தும் போது காணொளிகளை பார்ப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை

வாகனம் செலுத்தும் போது காணொளிகளை பார்ப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை

0
image

வாகனம் செலுத்தும் போது காணொளிகள் பார்ப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனம் செலுத்தும் சந்தர்ப்பத்தில் சில வினாடிகள் ஏற்படும் கவனச்சிதறல் கூட பாரிய விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமையக்கூடும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு தொடர்பான விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், காணொளிகளைப் பார்ப்பதற்காக சாரதிகள் வீதியிலிருந்து தங்களது கவனத்தைத் திருப்பும் போது, எதிரே வரும் வாகனங்கள், பாதசாரிகள் அல்லது தடைகளைத் தவிர்ப்பதற்கான முக்கியமான எதிர்வினை நேரத்தை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாரதிகள் தங்களது உயிரை மட்டுமன்றி, வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மற்றும் வீதியைப் பயன்படுத்தும் பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள் எனவும் பொலிஸார் நினைவூட்டியுள்ளனர்.

பயணத்தை நிறைவு செய்த பின்னரே காணொளிகள் மற்றும் பிற பொழுதுபோக்குகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ள பொலிஸார், “காணொளிகளை பின்னர் பார்க்கலாம்; ஆனால் இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது” எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்து வீதி பயனாளர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள பொலிஸார், விபத்துகளின்றி பாதுகாப்பாக இலக்கை அடைய சாரதிகள் முழு கவனத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/police-warn-to-avoid-watching-videos-while-driving-1786085853

NO COMMENTS

Exit mobile version