Home இலங்கை கல்வி பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

0

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று (07) வெள்ளிக்கிழமை நிறைவடையும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

க.பொ.த உயர்தர பரீட்சை

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் இன்றுடன் (07)  நிறைவடையவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளது.

அத்துடன், அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி (திங்கட்கிழமை) அன்று ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவடைகிறது

மேலும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://ibctamil.com/article/schools-to-close-for-august-holidays-today-1786071617

NO COMMENTS

Exit mobile version