Home இலங்கை வாகன இறக்குமதிக்கு கிரீன் சிக்னல்..

வாகன இறக்குமதிக்கு கிரீன் சிக்னல்..

0
image

பல ஆண்டுகளுக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், அரசாங்கம் பெற்ற மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 2.956 டிரில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளன.

இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீத அதிகரிப்பாகும்.

மேலும், 2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள 5.3 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கில் 55.8 சதவீதம் முதல் ஆறு மாதங்களிலேயே எட்டப்பட்டுள்ளது.

மானியங்களைத் தவிர்த்து அரசாங்கத்தின் நேரடி வருமானமும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. 

2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாயாக இருந்த இந்த வருமானம், 2026ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

Source: https://samugammedia.com/green-signal-for-vehicle-imports-1787585162

NO COMMENTS

Exit mobile version