குருநாகலில் வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி ஏற்பட்ட தகராறின் போது குறித்த அதிகாரி மீது பொல்லினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (13) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 54 வயதுடைய பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
