Home முக்கியச் செய்திகள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

0

மொனராகலை, 14ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (21) அன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புத்தலையிலிருந்து கபிலவத்த முருகன் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமும், புத்தலையிலிருந்து வந்த டிப்பர் லாரியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், காயமடைந்த மூவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/150-381756

NO COMMENTS

Exit mobile version