Home இலங்கை விவசாயக் கிணற்றில் விழுந்து தாயும், மகளும் மரணம்!

விவசாயக் கிணற்றில் விழுந்து தாயும், மகளும் மரணம்!

0
image

கலேவெல, தென்னகோன்புர துபார குளத்திலுள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

மீன்பிடிப்பதற்காகத் துபார குளத்திற்குச் சென்ற தனது மகன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரைத் தேடி குறித்த தாய் தனது மகளையும் அழைத்துக்கொண்டு குளக்கரைக்குச் சென்றுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது, துபார குளப்பகுதியில் வெட்டப்பட்டிருந்த விவசாயக் கிணறு ஒன்றில் தாயும் மகளும் தவறி விழுந்தமையினாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்விபத்தில் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தாயும், அவரது 10 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/mother-and-daughter-die-after-falling-into-a-farm-well-1782750078

NO COMMENTS

Exit mobile version