Home இலங்கை வெளிநாட்டு வேலை ஆசையை பயன்படுத்தி ரூ.20 லட்சம் மோசடி – பெண் கைது

வெளிநாட்டு வேலை ஆசையை பயன்படுத்தி ரூ.20 லட்சம் மோசடி – பெண் கைது

0
image

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக நம்பவைத்து, சுமார் 20 இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்படி, நேற்று (26) காலை அலுபோமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/woman-arrested-for-defrauding-rs-20-lakh-using-desire-for-foreign-job-1782543266

NO COMMENTS

Exit mobile version