Home முக்கியச் செய்திகள் பாலம், பக்கோ இயந்திரத்துடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய 09 ஆவது இந்திய நிவாரண விமானம்

பாலம், பக்கோ இயந்திரத்துடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய 09 ஆவது இந்திய நிவாரண விமானம்

0

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவை அடுத்து இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

இதன்படிட “சாகர பந்து” நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரண உதவியில் இந்தியாவின் 09வது நிவாரண விமானம் இன்று (06) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

பாலம் மற்றும் பக்கோ இயந்திரம்

இந்த விமானம் 110 அடி நீளமும், 65 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட பெய்லி பாலம் மற்றும் ஒரு ஜேசிபி பக்கோ இயந்திரத்தை சுமந்து வந்தது.

 மேலும், இந்திய இராணுவ பொறியாளர் படையைச் சேர்ந்த 13 பொறியாளர்கள் உதவி வழங்க இங்கு வந்துள்ளனர்.

இலங்கை இராணுவ பொறியாளர் படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் இந்தப் பொருட்களைப் பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version