Home இலங்கை பொருளாதாரம் இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் : அதிகரித்த வருமானம்

இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் : அதிகரித்த வருமானம்

0

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு 1.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது

அதன்படி, இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், அந்த எண்ணிக்கை 286,085 ஆக அமைந்துள்ளது.

சுற்றுலா வருமானம் 

அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,722 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து116,257 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தத் துறைக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில்,ஜூலை மாதத்துக்கான சுற்றுலா வருமானம் 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

இது ஜூலை 2024 இல் பதிவு செய்யப்பட்ட 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து மிகுந்த அதிகரிப்பு ஆகும்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, இது ஆண்டுக்கு ஆண்டு 7.8 சதவீதம் அதிகரிப்பைக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version