Home இலங்கை பொருளாதாரம் விவசாயிகளுக்கு 1 இலட்சம் ரூபா விசேட இழப்பீடு: சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம்

விவசாயிகளுக்கு 1 இலட்சம் ரூபா விசேட இழப்பீடு: சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம்

0

பயிர் சேத நட்டஈடு தொடர்பில், ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வறட்சி, வெள்ளம் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு குறித்த இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

பயிர் சேதம்

குறித்த பயிர் சேதத்திற்கான இழப்பீட்டில் விவசாயிகளிடமிருந்து பங்களிப்பு எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனஅமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், நெல், சோளம், மிளகாய், வெங்காயம், சோயாபீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய ஆறு வகையான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version