Home சினிமா 10 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

மதராஸி

கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளிவந்த திரைப்படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். துப்பாக்கி படத்திற்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வில்லனாக வித்யுத் ஜாம்வால் நடித்திருந்தார்.

மேலும், ஷபீர், விக்ராந்த், பிஜு மேனன் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் வசூலில் சற்று சரிவை இப்படம் சந்தித்துள்ளது.

இந்த நிலையில், 10 நாட்களை கடந்திருக்கும் மதராஸி படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/10-days-box-office-collection-of-madharaasi-movie-1757904674

NO COMMENTS

Exit mobile version