Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களுடன் பயன்பெறப்போகும் மற்றொரு தரப்பினர்: அநுர வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களுடன் பயன்பெறப்போகும் மற்றொரு தரப்பினர்: அநுர வெளியிட்ட அறிவிப்பு

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதியும் வழங்கப்படும் என
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில்  நேற்று (02) தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான சம்பளம்

தொடர்ந்தும் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், “தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர், மே தினமன்று கொட்டகலையில் 1750 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் எந்த தோட்டத் தொழிலாளிக்கும் அந்த சம்பளம் வழங்கப்படவில்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்.

மக்கள் எப்பொழுதும் அரசை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை, பொருளாதாரம் சீராகும் வரை மக்களைக் காப்போம்.

கிடைத்துள்ள வாய்ப்பு 

அதன் பிறகு மக்கள் செய்யும் வேலைகளில் நல்ல வருமானம் கிடைக்கும், மக்கள் நலமாக வாழலாம், தேசிய மக்கள் சக்தி ஒரு சமுதாயத்தை நிறுவும்.

இந்த கனவு நமக்கு எவ்வளவு காலமாக இருந்தது? மக்களை முன்னேற்ற எவ்வளவு கனவு கண்டிருப்போம்? இப்போது எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.” என்றார்.
” 

NO COMMENTS

Exit mobile version