Home இலங்கை சமூகம் பூண்டுலோயாவில் மண்சரிவு அபாயத்தால் 10 குடும்பங்கள் இடம்பெயர்வு

பூண்டுலோயாவில் மண்சரிவு அபாயத்தால் 10 குடும்பங்கள் இடம்பெயர்வு

0

Courtesy: Aadhithya

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா டன்சினன் தோட்ட தொழிற்சாலை பிரிவில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் 10 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

நில வெடிப்பு 

நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலையால் குறித்த பகுதியில் தொடர்மாடி குடியிருப்பிற்கு அருகாமையில் ஏற்பட்ட நில வெடிப்பால் குறித்த பகுதி மக்கள் தங்களின் உடைமைகளுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதி ஏற்கனவே அபாய எச்சரிக்கை பகுதியாக அடையாளப்படுத்தப்படுத்தட்ட பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version