யாழில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று குடை சாய்ந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற அரச மரமே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.
முழுமையாக சேதம்
இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதிலும் சேதமடைந்துள்ளது.
இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.