Home முக்கியச் செய்திகள் யாழ் மாவட்ட அனர்த்த நிலை : உயர்மட்ட கலந்துரையாடல்

யாழ் மாவட்ட அனர்த்த நிலை : உயர்மட்ட கலந்துரையாடல்

0

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயாகொந்தாவுடன் கலந்துரையாடல் யாழ்ப்பாண(jaffna) மாவட்ட
செயலகத்தில் இன்று(28) முன்னெடுக்கப்பட்டது.

உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கடற்றொழில் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரன் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம்,
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா,
மற்றும் முப்படை தளபதிகள், அரசாங்க அதிகாரிகள் மாவட்டம் செயலக
உத்தியோகத்தர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைப்புகள்,அரச நிறுவன பணிப்பாளர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது

வெள்ள அனர்த்தங்களின்போது பொதுமக்களை எவ்வாறு
பாதுகாப்பது, முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

NO COMMENTS

Exit mobile version