விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவினால் (Dr. Maheshi Wijeratne)சத்திர சிகிச்சைக்கு உள்ளாகி பாதிப்புகளை எதிர்கொண்ட 100 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல்கள் இருப்பின் 1954 என்ற துரித இலக்கம் அல்லது ciaboc_gen@ciaboc.gov.lk. என்ற இணைய முகவரியின் ஊடாக அறிவிக்க முடியுமென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றம் அளித்த உத்தரவு
வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்ன சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வெளி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சித்ததால் நோயாளிகளுக்கு அதிக செலவை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த மாதம் 17ம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்ட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்ன எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
