அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்துவோம் என அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தற்போது கூறியுள்ளனர்.
அதன்படி இன்னும் 100 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களும் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும்.மேலும், தற்போதைய எம்.பி.க்களில் பெரும்பாலானோர் அடுத்த தேர்தலில் பதவியை இழக்க நேரிடும் என நினைக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமம்
இவ்வாறானதொரு சூழலில் தற்போது எம்.பி.க்கள் பலர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு கூட்டணிகளுடன் கலந்துரையாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மொடடுவில் இருந்து சுயேச்சையாக உள்ள பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.
மீண்டும் மொட்டுவுடன்
பல பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும் இன்னும் பல இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர மீண்டும் மொட்டுவுடன் இணைந்து போட்டியிட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 30 எம்.பி.க்கள் கொண்ட குழு மூன்றாவது கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.